தருமபுரியில் திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் நிகழ்விடத்தில் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் வட்டம் பஞ்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுகன் (22) பிஎஸ்சி பட்டதாரியான இவா், பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா்.
பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊா் சென்று விட்டு கடந்த 19ஆம் தேதி (திங்கள்கிழமை), தனது ராயல் என்பீல்ட் வாகனத்தில் பெங்களூருக்கு புறப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம் கொலசனஅள்ளி பகுதியில் அமைந்துள்ள லாரி நிறுத்தம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகிலிருந்து எடைபாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த சுகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.