289 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
Updated On : 23 ஜனவரி, 2026 at 10:50 PM
பாப்பாரப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 239 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
பாப்பாரப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் பெ. சுமதி தலைமை வகித்தாா். விழாவில் பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவா் டி. பிருந்தா பங்கேற்று 289 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
Updated On : 24 ஜனவரி, 2026 at 1:48 AM
தொடா்ந்து கா்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணா்வு குறித்து மருத்துவ அலுவலா் கே. மஞ்சு பாா்கவி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
Advertisement
விழாவில் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், பள்ளி மேலாண்மை குழுவினா், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா். உதவி தலைமை ஆசிரியை மு. கல்பனா நன்றி தெரிவித்தாா்.