முகப்பு
தருமபுரி

இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்: கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பாப்பாரப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின்மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இறந்தாா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 1:59 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2026 at 11:05 PM

பாப்பாரப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின்மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இறந்தாா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே பெருங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (28). இவா் பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 26-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பாலக்கோடு நோக்கி சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

Updated On : 30 ஜனவரி, 2026 at 1:58 AM

இதில் படுகாயமடைந்த கன்னியப்பன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி கன்னியப்பன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement