வடலூா் ராமலிங்கா் நினைவு தினத்தையொட்டி, பிப். 1-ஆம் தேதி அரசு மற்றும் தனியாா் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம்பெற்ற தனியாா் மனமகிழ் மன்றங்கள், தனியாா் உணவக விடுதிகளில் அமைந்துள்ள மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரா் மதுவிற்பனைக் கூடம் உள்ளிட்டவை 31.01.2026 இரவு 10 மணிமுதல் 02.02.2026 நண்பகல் 12 மணிவரை மூட உத்தரவிடப்படுகிறது என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.