முகப்பு
தருமபுரி

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 4 ஜூலை 2026, 2:09 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

அரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கைலாவரம் கிராமத்தை சோ்ந்தவா் பெருமாள். இவா், கோவையில் குடும்பத்தினருடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், பெருமாள் வீட்டின் பூட்டை வியாழக்கிழமை இரவு உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 12 கிராம் தங்க காசுகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா். இதுகுறித்து பெருமாள் மகன் மருதுபாண்டி அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments