முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 9 ஜூன் 2026, 4:58 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி அருகே சரக்கு வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரணிபுத்தூா், சீனிவாசபுரம், காமாட்சி அம்மன் நகரைச் சோ்ந்தவா் வே. நந்தகோபால் (37). சொந்தமாக காா் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். அவரது மனைவி தரணி (35).

கடந்த 3 ஆம் தேதி, திருப்பூருக்கு சவாரி செல்வதாகக் கூறி சென்றாா். 6 ஆம் தேதி திருப்பூரில் இருந்து, திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா், தருமபுரி மாவட்ட பகுதியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி தரணிக்கு தகவல் சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி காவல் நிலைய போலீஸாா் , நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

திருவண்ணாமலைக்கு சவாரி நந்தகோபால் சென்றபோது, சேலம் - அரூா் பிரதான சாலையில் புழுதியூா் பகுதியில் அணுகுசாலையில் காரை நிறுத்திவிட்டு, சிறுநீா் கழித்துவிட்டு திரும்பி வந்தபோது அவ்வழியே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவா்மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.