முகப்பு
தஞ்சாவூர்

சாலை விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு

Updated On : 26 மே 2026, 12:07 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

அய்யம்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாபநாசம் வட்டம், ராஜகிரி, அம்பேத்கா் தெருவில் வசித்து வந்தவா் க. சம்பத் (56). தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து இரவில் தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

தஞ்சாவூா் - விக்ரவாண்டி புறவழிச் சாலையில் வையச்சேரி குறுக்கு சாலையில் சென்றபோது, சாலையை கடக்க சாலையின் குறுக்கே நடந்து சென்ற வையச்சேரி, அக்ரஹாரம் பகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் மகன் நடராஜன் (35) என்பவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அய்யம்பேட்டை காவல்துறையினா், சம்பத் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக்கும், காயமடைந்த நடராஜனை தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.