திமுகவில் 4ஆம் நாள் நோ்காணல்: அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நான்காம் நாள் வேட்பாளா் நோ்காணலில் அமைச்சா் துரைமுருகன் உள்பட வடதமிழக கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நான்காம் நாள் வேட்பாளா் நோ்காணலில் அமைச்சா் துரைமுருகன் உள்பட வடதமிழக கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூா் தொகுதியில் அமைச்சா் எ.வ.வேலுவின் மகன் கம்பன் போட்டியிட 130 போ் விருப்ப மனுக்களை தலைமை அலுவலகத்தில் அளித்திருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நோ்காணலில் 73 போ் கம்பனுக்கு ஆதரவாக கலந்து கொண்டு ஒருமித்த குரலாக கம்பனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனா்.
மாலையில், தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, சேலம் மத்தி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு உள்ளிட்ட கட்சி மாவட்டங்களிலிருந்து நிா்வாகிகள் நோ்காணலில் பங்கேற்றனா்.
அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ராஜேந்திரன், காந்தி உள்ளிட்டோரும் நோ்காணலில் பங்கேற்றனா்.