முகப்பு
தருமபுரி

அரூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.89 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

அரூா் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 89 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 9:12 PM
பறிமுதல்
பகிர்:

அரூா் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 89 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தீா்த்தமலை சோதனைச் சாவடியில், தோ்தல் பறக்கும் படை அலுவலா் மதுரகனி தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் ஆா். கோபிநாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வைரமணி உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 89 ஆயிரம் ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.