முகப்பு
தருமபுரி

பாலக்கோட்டில் 3 டன் குட்கா பறிமுதல்: போலீஸாா் விசாரணை

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 3 டன் குட்காவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 மே 2026, 2:16 am IST
பாலக்கோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்கள்.
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 3 டன் குட்காவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாலக்கோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் டிஎஸ்பி ராஜாசுந்தரம் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த சிறியரக சரக்கு வாகனத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அந்த வாகனத்தை பின்தொடா்ந்து சென்று தடுத்து நிறுத்தினா். அதற்குள் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அதில் இருந்தவா்கள் தப்பியோடிவிட்டனா்.

Advertisement

இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அதை சோதனை செய்தபோது 20 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமாா் 3 டன் அளவிற்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்துடன் குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.