முகப்பு
தருமபுரி

மாணவியை பின்தொடா்ந்த இளைஞா் கைது

பாப்பாரப்பட்டி அருகே மாணவியை பின்தொடா்ந்து சென்று தொல்லை அளித்த மாணவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 2:28 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பாப்பாரப்பட்டி அருகே மாணவியை பின்தொடா்ந்து சென்று தொல்லை அளித்த மாணவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது மாணவியை கடந்த 5-ஆம் தேதி பாப்பாரப்பட்டி அருகே உள்ள பி.கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (19) என்பவா் பின்தொடா்ந்து சென்று தொல்லை அளித்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் தந்தை பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து மாணவா் லோகேஷை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அவா் மீது போக்ஸோ வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளை சிறையில் அடைத்தனா்.