தருமபுரி

நஷ்டத்தை ஈடு செய்ய குறைந்த விலை பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்: ஆவின் அதிரடி

கிருஷ்ணகிரி, ஜூன் 14: நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் குறைந்த விலையில் விற்கப்பட்ட பால் பாக்கெட் (குறைந்த கொழுப்பு சத்து உள்ள - நீல நிற பாக்கெட்) விற்பனையை நிறுத்தி, அதிக விலை கொண்ட பால் பாக்கெட்டுகளை வ

எஸ்.கே ரவி

கிருஷ்ணகிரி, ஜூன் 14: நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் குறைந்த விலையில் விற்கப்பட்ட பால் பாக்கெட் (குறைந்த கொழுப்பு சத்து உள்ள - நீல நிற பாக்கெட்) விற்பனையை நிறுத்தி, அதிக விலை கொண்ட பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்ட அட்டை முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்தின் இந்த திடீர் முடிவு வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

 ÷கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு மத்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நாள்தோறும் சராசரியாக 1.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பசும்பால் லிட்டர் ரூ.16-க்கும், எருமை பால் லிட்டர் ரூ.20-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் பாலில் நாள்தோறும் 80 ஆயிரம் லிட்டர் பால் சென்னை நகருக்கு அனுப்பப்படுகின்றன. மீதம் உள்ள பால், பால் பவுடர் உற்பத்தி போக தினசரி வாடிக்கையாளர்கள், அரசு நிறுவனங்கள்,அரசு மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

 ÷கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 19 ஆயிரம் ஆவின் வாடிக்கையாளர்களுக்கு நீலம் மற்றும் பச்சை நிற பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வந்தன. 3.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட நீல நிறம் கொண்ட அரை லிட்டர் பாக்கெட்டு ரூ.10-க்கும், 4.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட பச்சை நிற அரை லிட்டர் பாக்கெட் ரூ.13-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் குறைந்த கொழுப்பு சத்துள்ள நீல நிற பால் பாக்கெட்டுகளுக்கான விற்பனை நிறுத்தப்பட்டு, பச்சை நிற பால் பாக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஆவின் பால் நுகர்வோர் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.3 கூடுதல் விலை கொடுத்து பச்சை நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நுகர்வோர் மாதத்தில் பாலுக்காக லிட்டருக்கு 200 வரை கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நடுத்தர வருவாய் உள்ளவர்களை பாதித்துள்ளது.

 ÷இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, "பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்வோருக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு ஆவின் நிர்வாகத்துக்கு ரூ.1.5 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் குறைந்த கொழுப்பு சத்துள்ள நீல நிற பால் பாக்கெட்டுகளுக்கான விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆவின் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுவரும் நஷ்டம் சிறிதளவு தவிர்க்கப்படும். மேலும் மாதந்தோறும், விருப்பமுள்ள நுகர்வோரிடமிருந்து முன்பணமாக பெற்று அதற்கு ஒரு அட்டை வழங்கப்பட்டு குறைந்த விலையில் பால் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. போலி அட்டைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அட்டை வழங்கும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக' பெயர் குறிப்பிட விரும்பாத ஆவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 ÷வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு: குறைந்த கொழுப்பு சத்துள்ள நீல நிற பாக்கெட்டுகளுக்கான விற்பனை கைவிடப்பட்டுள்ளதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கைக்குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் விரும்பி குறைந்த கொழுப்பு சத்து பாலை அருந்தி வந்தனர். தற்போது இந்த பாலுக்கான விற்பனை கைவிடப்பட்டுள்ளதால் தனியார் நிறுவனத்தினர் விற்பனை செய்யும் பாலை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.

 ÷குறைந்த சத்துள்ள பாலுக்கான விலையை சற்று உயர்த்தி, மீண்டும் நீல நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆவின் நுகர்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT