தருமபுரி

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு: குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தருமபுரியில் புதன்கிழமை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் கோட்டாட்சியர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி, தருமபுரி வருவாய்க் கோட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து சேதப்படுத்து வருகின்றன.
இவ்வாறு, சேதமைடந்த விளைநிலங்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்திப் பேசினார்.
கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை, வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT