தருமபுரி

போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில்: மூடப்பட்ட கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்க வலியுறுத்தல்

DIN

போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக வாளகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கழிவறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாச்சியர் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், சார் நிலை கருவுலம், இ சேவை மையம், ஆதர் அட்டை பதிவு அலுவலகம், வட்டச்சியார் குடியிருப்பு என ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் மனு அளிக்கவும், சான்றிதழ்கள் பெறுவதற்காகவும், முதியோர் உதவித்தொகை விண்ணப்பிக்கவும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வட்டாட்சியர் வளாகத்தில் செயல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், 2012 - 2013 ம் ஆண்டு 13 வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் ரூபாய் 4 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் காத்திருக்கும் கூடம் அருகில் ஒரு கழிவறை கட்டப்பட்டு இந்த கழிவறையில் ஆண், பெண் ஆகியோருக்கு மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியாக கழிவறை கட்டப்பட்டு அதில் தண்ணீர் தொட்டியும் வைக்கப்பட்டது.
ஆனால், அந்த கழிவறைக்கு இதுவரை மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கழிவறை கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. கழிவறைகளை கட்டி விட்டு, அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடாமல் கிடப்பில் போட்டுள்ளதால் நாள்தோறும் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT