தருமபுரி

வங்கிக் கணக்கு விவரங்களை பிறருக்கு தெரிவிக்க வேண்டாம்: மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்

தினமணி

வங்கிக் கணக்கு விவரங்களை பிறருக்கு தெரிவிக்க வேண்டாம் என்று தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தெரிவித்தார்.
 இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களின் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் சிலர், நூதன முறையில் பல்வேறு காரணங்களைக் கூறி, வங்கிக் கணக்கு விவரங்களைக் கோருகின்றனர். இதனுடைய, உண்மைத் தன்மை குறித்து தெரியாமல், விவரங்களை வழங்குவதால், நூதன முறையில் அவர்களுடைய கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்து அந்த நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக, தருமபுரி மாவட்டக் காவல்துறை சார்பில், வாகன விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், இத்தகைய மோசடி நபர்களால் சிலர், தொடர்ந்து ஏமாற்றம் அடைவதாகப் புகார்கள் வந்துள்ளன.
 எனவே, தருமபுரி மாவட்டத்தில், வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள், தங்களைத் தொடர்புகொண்டு யாரேனும், கணக்குத் தொடர்பான விவரங்களை கோரினால், தரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT