தருமபுரி

"டிஜிட்டல் இந்தியா' விழிப்புணர்வு பிரசாரம்

தினமணி

மத்திய அரசின் "டிஜிட்டல் இந்தியா' திட்டத்துக்கான விழிப்புணர்வு பிரசார வாகனம் புதன்கிழமை தருமபுரி வந்தது.
 மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் இந்த வாகனத்தைப் பார்வையிட்டு மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் பிரசாரம் செய்யும் முகாமைத் தொடங்கி வைத்தார்.
 மாவட்டத்திலுள்ள வங்கிகள், அஞ்சலகங்கள், பொது சேவை மையங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகச் செயல்பட்டு வருகிறது என அப்போது ஆட்சியர் தெரிவித்தார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், கோட்டாட்சியர் கவிதா, முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, மத்திய அரசின் தேசிய தகவலியல் அலுவலர் அ. ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT