தருமபுரி

கூத்தாண்டவர் கோயில் திருவிழா

DIN

சாமியாபுரம் கூட்டுச் சாலையில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் காளிப்பேட்டை, கோம்பூர், மஞ்சவாடி, சாமியாபுரம், பட்டுகோணம்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 10 மணியளவில் கூத்தாண்டவர் சுவாமி தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் சுவாமியின் தலை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு ஆட்டுக்கிடா பலியிட்டு பூஜைகள் செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT