தருமபுரி

கடத்தூர் அரசுப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

DIN

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடத்தூர் கிளை நூலகமும், வாசிப்பை நேசிப்போம் இயக்கமும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
முன்னதாக நடைபெற்ற நூலக விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு தலைமை ஆசிரியை ரமாதேவி தலைமை வகித்தார். பள்ளி நூலகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியை கோகிலா முன்னிலை வகித்தார்.
நூலக விழிப்புணர்வுக் கூட்டத்தில் பேசிய வாசிப்பை நேசிப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நூலகர் சி. சரவணன், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட வாசிப்பின் மூலம் மாணவர்கள் மொழிஅறிவு, படைப்பாற்றல், தலைமைப் பண்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
கடத்தூர் முத்தமிழ் மன்றத் தலைவர் கோ. மலர்வண்ணன் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். முன்னதாக ஆசிரியை வி. அன்புக்கரசி வரவேற்றார். முடிவில் வாசிப்பை நேசிப்போம் இயக்கத்தின் பொறுப்பு ஆசிரியை சின்னசாமி நன்றி கூறினார்.
அக்டோபர் இறுதி வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT