தருமபுரி

டெங்கு விழிப்புணர்வு முகாம்

DIN

அரூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரூர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் இந்தியன் மகளிர் கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த முகாமை செயல் அலுவலர் மா.ராஜா ஆறுமுகம் தொடக்கி வைத்தார்.
அரூர் பேரூராட்சிக்குள்பட்ட 14, 15 மற்றும் 16-ஆவது வார்டு பகுதிகளில் கல்லூரி மாணவியர், துப்புரவுப் பணியாளர்கள் டெங்கு குறித்த துண்டுப் பிரசுரங்களை வீடுவீடாக வழங்கினர்.
தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள்,  டயர்கள், சேதமடைந்த பொருள்கள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்குவதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முகாமில், இந்தியன் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் பவானி விக்னேஷ், வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.தொல்காப்பியன், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் இளவரசன், கலையரசன், மேலாளர் கே.ஆறுமுகம், தலைமை எழுத்தர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT