தருமபுரி

ஜேக்டோ-ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு

DIN

தருமபுரியில் நடைபெற்று வந்த ஜேக்டோ-ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 3-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் கடந்த செப்.7-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வந்தது.
முதல்நாளில் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, 8-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். வியாழக்கிழமை தொடங்கிய காத்திருப்புப் போராட்டம் இரவும் தொடர்ந்து நீடித்தது. பந்தல் அமைத்து காத்திருப்புப் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இரவு பந்தல் பிரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (செப்.15) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில், ஜேக்டோ-ஜியோ மாநிலத் தலைமையின் அறிவிப்புக்கிணங்க போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்து, மதியம் 2 மணிக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT