தருமபுரி

வேளாண் திட்டப் பணிகள்: இயக்குநர் ஆய்வு

DIN

தருமபுரி மாவட்டத்தில் வேளாண் திட்ட பணிகள் குறித்து வேளாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி சனிக்கிழமை வயலாய்வு செய்தார்.
காரிமங்கலம் வட்டாரத்திற்குள்பட்ட பெரியாம்பட்டியில், விதைப்பண்ணை பதிவு செய்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் பயிர்களை ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, கெட்டுமாரனள்ளியில் கூட்டு பண்ணை முறைதிட்ட விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.
வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்களான நீடித்த நிலையான மானாவரி இயக்கம், நீடித்த நிலையான கரும்பு சாகுபடிக்குத் தேவையான நுண்ணீர் பாசன கருவிகள் அமைத்தல் மற்றும் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு மானியம் மூலம் நிகழ் பருவத்திற்குத் தேவையான இடுபொருள்களான கொள்ளு, ராகி, தென்னங் கன்றுகள், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவருக்கு, வேளாண் இயந்திரமான ரோடோவேட்டர் ரூ.75,000 மானியமாக வேளாண் இயக்குநர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், வேளாண் இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசிலா, துணை இயக்குநர் வீராசாமி,
வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT