தருமபுரி

கங்கபாளையத்தில் எருது விடும் விழா: 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

DIN

கங்கபாளையத்தில் நடைபெற்ற  எருது விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
தருமபுரி மாவட்டம்,  பஞ்சப்பள்ளி அருகே கங்கபாளையத்தில், செவ்வாய்க்கிழமை எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில், கங்கபாளையம், பாளையம், கூத்தாண்டஅள்ளி, நமாண்டஅள்ளி,  திம்மிஜேப்பள்ளி, ஒட்டர்திண்ணை உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று, சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் அடக்கினர். மேலும், சில இளைஞர்கள், காளைகளை ஏறித்தழுவி கொம்புகளில் கட்டியிருந்து பொருள்களை தட்டிச் சென்றனர். காளைகளை அடக்கி சிறப்பிடம் வகித்த இளைஞர்களுக்கு பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகளை விழாக்குழுவினர் அளித்தனர். இதில், காளைகள் முட்டியதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.
விழாவைக் காண, பஞ்சப்பள்ளி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டனர். இதையொட்டி, பஞ்சப்பள்ளி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT