தருமபுரி

குரூப் 2 தேர்வு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 25,761 பேர் எழுதினர்

DIN

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2 தேர்வை 25761 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் குரூப் -2 முதல் நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 மையங்களில் நடைபெற்ற தேர்வை 8779 பேர் எழுதினர். 3,358 பேர் விண்ணப்பித்திருந்தும் தேர்வெழுதவில்லை.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் உடனிருந்தார். 
தருமபுரி மாவட்டத்தில் 80 மையங்களில் 16,982 பேர் தேர்வெழுதினர். இம் மாவட்டத்தைச் சேர்ந்த 22,098 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். 
இவர்களுக்காக 80 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.14 பறக்கும் படைகளும், 14 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களும், 80 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 16,982 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

SCROLL FOR NEXT