தருமபுரி

"கஜா' தாக்கம்; தருமபுரியிலும் மழை

DIN

வங்கக் கடலில் உருவான "கஜா' புயல் வியாழக்கிழமை இரவு கரையைக் கடந்ததன் தாக்கமாக, தருமபுரி மாவட்டத்திலும் வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை விடியற்காலையும் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டமாகவே காட்சியளித்தது. 
வங்கக் கடலில் உருவான "கஜா' புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை விடிய விடிய கடும் மழைப் பொழிவும், அதிவேகக் காற்றும் அடித்தது. விடியற்காலை சுமார் 3 மணியளவில் "கஜா' புயல் கரையைக் கடந்தது.
இதன் தாக்கமாக தருமபுரி மாவட்டத்திலும் வியாழக்கிழமை மாலையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இரவில் தூறல் காணப்பட்டது. விடியற்காலை வரையிலும் தொடர்ந்து லேசான மழைப் பொழிவு இருந்தது. மாலை வரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வானம் மேக மூட்டமாகவே காணப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழைப்பொழிவு: தருமபுரி- ஒரு மி.மீ, அரூர் - 24 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி- 10 மி.மீ. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளில் மழை பதிவாகவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT