தருமபுரி

அரசு மருத்துவமனையில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தல்

DIN

அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில்,  தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்,  2016 - 17 -ஆம் ஆண்டில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து,  அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் ஓரிரு தினங்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலன தினங்கள் பூட்டியே இருப்பதாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.  இதனால் பாதுகாப்பான குடிநீரின்றி நோயாளிகள் அவதியுறுகின்றனர். எனவே, அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீரை நாள்தோறும் வழங்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT