தருமபுரி

பொருள்கள் தட்டுப்பாடு: நியாய விலைக் கடை முற்றுகை

DIN

அரூரை அடுத்த பறையப்பட்டியில்  பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்து கிராம மக்கள் நியாய விலைக் கடையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் ஊராட்சி பறையப்பட்டியில் முழுநேர நியாய விலைக் கடை உள்ளது. இந்த கடையில் 473 குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெறுகின்றனர். இந்த நிலையில், இந்த கடைக்கு மாதந்தோறும் 420 அட்டைகளுக்கு மட்டுமே பொருள்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறதாம்.
இதேபோல், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டுமே கிடைக்கிறதாம். அதன் பிறகு இருப்பு இல்லை என்று நியாய விலைக் கடை பணியாளர்கள் கூறுகின்றனர் என புகார் தெரிவித்து பறையப்பட்டி கிராம மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த அரூர் வட்ட வழங்கல் அலுவலர் மணி, வருவாய் ஆய்வாளர் சுதேஸ்வரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT