தருமபுரி

அரசு பள்ளிகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

DIN

தருமபுரி அருகே முத்துக்கவுண்டன் கொட்டாய், கடகத்தூர் நடுநிலைப் பள்ளிகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் வட்டார கல்வி அலுவலர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கெளரி ஆகியோர், மாணவ, மாணவியர் வளரிளம் பருவத்திலே சத்தாண உணவு உட்கொள்ள வேண்டியதின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினர். முத்துக்கவுண்டன் கொட்டாய் பள்ளித் தலைமை ஆசிரியர் சிவக்குமார், கடகத்தூர் பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
இந்த விழாவில் கீரை, பழ வகைகள், சுண்டல், கொள்ளு, எள், பருப்பு வகைகளால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT