தருமபுரி

அ.ம.மு.க. வேட்பாளர் பி.பழனியப்பன் வாக்குச் சேகரிப்பு

DIN

தருமபுரி மக்களவைத் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில், போட்டியிடும் வேட்பாளர் பி.பழனியப்பன், பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளுக்குள்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தார். 
பேகாரஅள்ளி,  புலிகரை, செல்லியம்பட்டி,  காட்டம்பட்டி, சோமனஅள்ளி, மோடுகுலகொள்ளஅள்ளி, கம்மாளப்பட்டி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி,  ஜெர்த்தலாவ்,  தண்டுகாரனஅள்ளி, கொலசனஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பி.பழனியப்பன் பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வேளாண் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதாகவும்,  சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கி வேலைவாய்ப்பு உருவாக்குவதாகவும் அவர் உறுதியளித்து பிரசாரம் செய்தார். அப்போது, அ.ம.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT