தருமபுரி

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

DIN


அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 
அரூர் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டியில் 600 - க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்காக  ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டியே உள்ளது.
இந்த நிலையில், மகளிர், சிறுவர்கள் சாலையோரங்களிலும், திறந்த வெளியிலும் மலம் கழிக்கும் நிலையுள்ளது. இதனால் சுகாதார கேடுகளும், நோய் தொற்றும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
 எனவே, பூட்டி வைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT