தருமபுரி

சாலைப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

DIN


ஊத்தங்கரை அருகே பழுதடைந்த சாலையை புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்தங்கரை அருகே வண்டிக்காரன் கொட்டாய் பகுதியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் நான்கு ரோடு இணைப்புச் சாலை வரையிலான 1,800 மீ. சாலை பழுதடைந்துள்ளது. இவ்வழியாக தாண்டியப்பனூர், பாரதிபுரம், வண்டிக்காரன் கொட்டாய், ஆட்டுக்காரன் கொட்டாய், மல்லம்பட்டி, நாப்பிராம்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை செல்கிறது. இப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சாலை அமைக்கும் பணியானது கடந்த ஜனவரி மாதம் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.75 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், சாலையை ஆங்காங்கே தோண்டிய நிலையில், மூன்று மாதங்களாகியும் சாலைப் பணிகள் முழுமையாக நடைபெறாமல் உள்ளன. இவ்வழியாக தங்கள் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியும், இரவு நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகி விடுவதாகவும் கூறுகின்றனர். முறையான சாலை இல்லாததால் தங்கள் பகுதிக்கு பள்ளி, கல்லூரி வாகனங்கள் கூட வர முடியாத நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைப் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT