தருமபுரி

கார்கள் மோதல்: 3 பேர் பலி

தருமபுரி அருகே இரு கார்கள் மோதிக் கொண்டவிபத்தில்,  அரசுப் பள்ளி ஆசிரியை, மனைவி, மகன் ஆகிய 3 பேர்உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர்.

DIN


தருமபுரி அருகே இரு கார்கள் மோதிக் கொண்டவிபத்தில்,  அரசுப் பள்ளி ஆசிரியை, மனைவி, மகன் ஆகிய 3 பேர்உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர்.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட பென்னாகரத்தைச் சேர்ந்தவர் மருந்துக் கடை உரிமையாளர் திருமூர்த்தி (42). இவரது மனைவி ஆசிரியை லதா (41). இவர்களுக்கு நிதின் அபிநவ் (13) என்ற மகனும், அபிநயா கீர்த்தி (10), வேத ரித்திகா (6)  என 2 மகள்களும் உள்ளனர்.
இவர்கள் 6 பேரும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை  அதியமான்கோட்டைக்கு வந்து பின்னர், இரவு காரில்பென்னாகரத்துக்கு திரும்பினர். காரை திருமூர்த்தி ஓட்டிச் சென்றார்.
இதேபோல், வேலூர் மாவட்டத்துக்குள்பட்ட திருப்பத்தூரைச் சேர்ந்த விவேக் (30), பண்டஹள்ளி ரத்தின வேல் (40), புலிகரையைச் சேர்ந்த சரவணன் (40), முருகன், பூகானஹள்ளி பிரகாஷ் (37) ஆகியோர் ஒகேனக்கல்லில் இருந்து காரில் தருமபுரியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை முருகன் ஓட்டி வந்துள்ளார். இந்த இரு கார்களும் இண்டூரை அடுத்த மல்லாபுரம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில், லதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த திருமூர்த்தி, நிதின் அபிநவ், உள்ளிட்ட 8 பேரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில், சிகிச்சைப் பலனின்றி திருமூர்த்தி, நிதின் அபிநவ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இது
குறித்து இண்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT