தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் "மண்ணின் தன்மைக்கேற்ப மரக் கன்றுகளை வளர்க்க வேண்டும்'

DIN

தருமபுரி மாவட்டத்தில் மண்ணின் தன்மைக்கேற்ப மரக் கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று நீர்மேலாண் இயக்க மத்தியக் குழுத் தலைவர் இந்தர் தமீஜா அறிவுறுத்தினார்.
 தருமபுரியில் இரண்டாவது நாளாக புதன்கிழமை நீர்மேலாண் இயக்கக் குழு, கள ஆய்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து நீர்மேலாண் இயக்க மத்தியக் குழுத் தலைவர் இந்தர் தமீஜா பேசியது:
 தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மண் தன்மைக்கேற்ப முறையான திட்டங்களை வகுத்து மரக்கன்றுகளை வைத்து வளர்க்க வேண்டும். மரக் கன்றுகள் நடுவதற்கு வனத் துறையில் பயிற்சி பெற்ற நபர்களைப் பயன்படுத்தி பாராமரிக்க வேண்டும். ஆறுகளின் குறுக்கே அதிக அளவில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். அவ்வாறு தடுப்பணைகள் அமைப்பதன் மூலம் மழைநீர் சேமிப்பதுடன் நிலத்தடி நீரை சேமிக்க இயலும். நீர் செறிவூட்ட முடியும்.
 மழைநீர் சேகரிப்பு திட்டம், நீர் மேலாண் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தவும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
 இதைத் தொடர்ந்து தருமபுரி ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்தியக் குழுவினர் மற்றும் மாணவியர் மழைநீர் சேகரிப்பு உறுதிமொழியேற்றனர். மேலும், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர் மேலாண்மை திட்டப் பணிகள், மழைநீர் சேகரிப்பு பணிகளையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 இதில் மத்தியக் குழு உறுப்பினர்கள் வேளாண் ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் எஸ்.ருக்மணி, குடும்பநலத் துறை அமைச்சகம் துணைச் செயலர் சரங்கதர் நாயக், சுற்றுச்சூழல், வனங்கள் அமைச்சக துணைச் செயலர் எஸ்.கே.பரிடா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துணைச் செயலர் சஜ்ஜாய் கோலி, மத்திய நீர் மேலாண் இயக்க அமைச்சகம், நீர்வள தொழில்நுட்ப அலுவலர்கள் ஆர்.ஆறுமுகம், எஸ்.கே.சுக்லா, விஞ்ஞானிகள் ஜோசப், எஸ்.கே.விஜயகுமார் மற்றும் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT