தருமபுரி

தூய்மை கணக்கெடுப்பு பணிகள் ஆய்வு

DIN

அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை கணக்கெடுப்பு பணிகள் குறித்து மத்திய குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 மத்திய அரசின் தூய்மை கணகெடுப்பு ஊரகம்-2019 திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் செயல்படுத்தும் சுகாதாரப் பணிகள், தூய்மைப் பணிகள், கழிப்பிட வசதிகள், மருத்துவ சேவைகள் குறித்து மத்திய ஆய்வுக் குழுவைச் சேர்ந்த எஸ்.வீரா, ஏ.சங்கர், எம்.உதயமுனி ஆகியோர் தலைமையில் அரசு அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
 அரூர் ஊராட்சி ஒன்றியம் அச்சல்வாடி, நரிப்பள்ளி, சிட்லிங் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், செந்தில்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வன், சக்திவேல், பணி மேற்பார்வையாளர் ஆர்.அன்பழகன், வட்டார ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT