தருமபுரி

கொய்மலர்கள் சாகுபடி பயிற்சி

DIN

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தில் புதன்கிழமை விவசாயிகளுக்கு கொய் மலர்கள், காய்கறிகள் சாகுபடி பயிற்சி முகாம் நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் பயிற்சியைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
வேளாண் அலுவலர் அருணன், பசுமைக் குடிலில் மலர்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். முன்னோடி விவசாயி சாமிக்கண்ணு சொட்டுநீர் பாசனத்தின் மூலம் காய்கறிகள் சாகுபடி செய்யும் துல்லியப் பண்ணைய தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கமளித்தார். அட்மா திட்ட அலுவலர்கள் ப.ரவி, சண்முகம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT