தருமபுரி

பிளாஸ்டிக் பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிப்பு

DIN

பாலக்கோட்டில் பிளாஸ்டிக் விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பாலக்கோட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையில் உள்ளதா என செயல் அலுவலர் ஜெலேந்திரன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர் .
இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சாலையோரக் கடைகள், மளிகைக் கடைகள், பேக்கரி, காய்கறிக் கடைகளில் புழக்கத்தில் உள்ளனவா என ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டன. இதில் 6 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,500 அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருள்களை விற்பனை செய்பவர்களுக்கும், இருப்பு வைப்பவர்களுக்கும், அதை வாங்குபவர்களுக்கும் ரூ.500 முதல் ரூ.ஒரு லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும் என பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT