தருமபுரி

மது பதுக்கி விற்ற 50 பேர் கைது: 600 மதுப்புட்டிகள் பறிமுதல்

DIN

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முறைகேடாக மது பதுக்கி விற்ற 50 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 600 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, ஜன. 16-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற மது விற்பனையகங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தருமபுரி, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் போலீஸார், மது விற்பனையை கண்காணிக்க சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முறைகேடாக மது பதுக்கி விற்பனை செய்த 46 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 600 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT