தருமபுரி

அரசு மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி

DIN

அரசு  மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு மாவட்ட  அளவிலான மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில்  72 அங்கன்வாடி மையங்களில் செயல்படும்  மழலையர்  வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளஆசிரியர்கள் மாண்டிசோரி முறையில் கற்பித்தலை நடத்துவது, மொழி வளர்ச்சிக்குத் தேவையான பாடல்கள்,  கதைகள் போன்ற செயல்பாடுகளுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன.  மேலும், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய மொழி உச்சரிப்பு குறித்த சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதேபோல, குழந்தைகளுக்கு  உளவியல், முன்பருவப் பாடத் திட்டங்கள், அதை அணுகும் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தருமபுரி  மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் அண்மையில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி தொடக்கி வைத்தார். உதவித் திட்ட அலுவலர் பா.வெங்கடேசன், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.தங்கவேலு ஆகியோர் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ப.குமுதா,  சு.சுகந்தி,  முதன்மைக் கருத்தாளர்கள் தனலட்சுமி, வினோதினி,  பார்கவி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT