தருமபுரி

மாரண்டஹள்ளியில் பெண் துப்புரவுத் தொழிலாளி கொலை

DIN

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே பெண் துப்புரவுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
பாலக்கோடு அருகே உள்ள சிக்கமாரண்டஅள்ளியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி வசந்தா (54). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வசந்தா, செவ்வாய்க்கிழமை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லையாம். இது தொடர்பாக, அருகிலிருந்து உறவினர் சென்று பார்த்தபோது, வசந்தா பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருப்பது  தெரியவந்தது.  இது குறித்த, தகவலின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாரண்டஹள்ளி போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT