தருமபுரி

நீர் நிலை குட்டையில் வழங்கிய வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்யக் கோரிக்கை

DIN

நீர் நிலை  குட்டையில்  வீட்டுமனைப் பட்டா வழங்கியதை ரத்து செய்ய  வேண்டும் என கோரி பருவதனஅள்ளி கிராம மக்கள்,  மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர். 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்,  திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பென்னாகரம்  அருகே உள்ள பருவதனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்,  அளித்த மனுவின் விவரம்: பருவதனஅள்ளி கிராமத்தில் குமரன்குட்டை (தம்பரான் குட்டை) உள்ளது. இந்த குட்டையின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 50 புளிய மரங்கள் இருந்தன. தற்போது அது 9 ஆக குறைந்துவிட்டது. இத்தகைய நிலையில் அந்த அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.  
எனவே,  இந்த வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்து, நீர் நிலை, குட்டையை மேம்படுத்தி நீர் ஆதாரத்தை அதிகரிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீர் நிலை குட்டையின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT