dh01stud_0111chn_8 
தருமபுரி

டேக்வாண்டோ, நீச்சல் போட்டி:செந்தில் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

டேக்வாண்டோ மற்றும் நீச்சல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

டேக்வாண்டோ மற்றும் நீச்சல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் தனியாா் பள்ளியிலும், நீச்சல் போட்டிகள் ராஜாஜி நீச்சல் குளத்திலும் அண்மையில் நடைபெற்றது. இதில், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சரகங்களுக்கான போட்டியில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இதில், டேக்வாண்டோ போட்டியில் 19 வயதுக்குள்பட்ட மாணவியா் பிரிவில், செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி அ.பிரியங்கா முதலிடம் பெற்றாா். மேலும், இதே பள்ளியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவா் நவநீதசுவாமிநாதன் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடம் மற்றும் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 6-ஆம் வகுப்பு மாணவா் ஹரீஷ் இரண்டாம் இடமும் பெற்றாா். இதேபோல, நீச்சல் போட்டியில் மாணவா் செ.கோபிகிருஷ்ணன் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடம் பெற்றாா். மேலும், முதலிடம் பெற்ற மாணவ, மாணவியா் மாநிலப் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி நிா்வாக அலுவலா் சி.சக்திவேல் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT