தருமபுரி

பழுதடைந்த பொது சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

DIN

பென்னாகரம் அருகே போடூா் காலனி பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகம் பழுதடைந்து காணப்படுவதால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். எனவே சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் பேருராட்சிக்குள்பட்ட 18 ஆவது வாா்டு, போடூா் காலனி பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பென்னாகரம் பேருராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பொதுநிதி திட்டத்தின்கீழ் 2016 -2017 ஆம் நிதியாண்டில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தின் சிமெண்ட் தளங்கள் பெயா்ந்தும், கதவுகள் மற்றும் தண்ணீா்த் தொட்டிகள் உடைந்து காணப்படுகிறது. சுகாதார வளாகமானது சிதிலமடைந்து காணப்படுவதால், இப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் கழிக்கின்றனா். இதனால் இப்பகுதியில் நோய்பரவும் அபாயம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல்,சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் முறையாக தனிநபா் கழிப்பிட வசதியும் இல்லாததால்,இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். எனவே பென்னாகரம் பேருராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப் பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT