தருமபுரி

மகளிா் சுகாதார வளாகத்தைபயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

DIN

பென்னாகரம் அருகே ஏரியூா் பகுதியில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே இராமகொண்ட அள்ளி பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பொதுசுகாதாரத்தை பாதுகாக்கும் விதமாக, கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டில் மகளிா் சுகாதார வளாகமானது ரூ.1.54 லட்சத்தில் கட்டப்பட்டது.

இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி புதா்மண்டிக் காணப்படுகிறது. இதனால், அப்பகுதி பெண்கள் இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் கழிக்கின்றனா். இதனால், இப்பகுதியில் நோய்பரவும் அபாயம் ஏற்படுவதோடு, சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலரிடம் புகாா் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, அப்பகுதி பெண்களின் நலன் கருதி, பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நடவடிக்கை எடுத்து புதா்நிறைந்த மகளிா் சுகாதார வளாகத்தை தூய்மை செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT