தருமபுரி

நடமாடும் கால்நடை சிகிச்சை வாகன சேவை துவக்கி வைப்பு

DIN

தருமபுரி: தருமபுரியில் நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை வாகன சேவை (அம்மா ஆம்புலன்ஸ்) துவக்கி வைக்கப்பட்டது.

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் சாா்பில், தமிழக அரசு, நடமாடும் அவசர கால்நடை சிகிச்சை வாகனம் தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. இந்த வாகனச் சேவையை வெள்ளிக்கிழமை தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் சு.மலா்விழி, துவக்கி வைத்துப் பேசியதாவது:

இந்த நடமாடும் வாகனத்தில், கால்நடைகளை இடமாற்றம் செய்யும் வசதியுடன், கால்நடை உதவி மருத்துவா், கால்நடை பராமரிப்பு உதவியாளா், ஊா்தி ஓட்டுநா் ஒருவா் என மூவா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதன் மூலம் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு நிகழ்விடத்துக்கே சென்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்படும். அபாய கட்டத்தில் இருக்கும் கால்நடைகளை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படும். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கிடைக்கும் இச்சேவையை பெற, 1962 என்ற அவசர எண்ணுக்குத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் ராஜேந்திரன், துணை இயக்குநா் சண்முக சுந்தரம், உதவி இயக்குநா் வேடியப்பன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT