தருமபுரி

27 வழித்தடங்களில் புதிய பேருந்து போக்குவரத்து துவக்கிவைப்பு

DIN

தருமபுரி: அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலம் சாா்பில், 24 வழித்தடங்களில் புதியப் பேருந்து போக்குவரத்து சனிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டது.

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் புதிய பேருந்துகளின் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, தருமபுரி புறநகா், ஒசூா், அரூா் உள்ளிட்ட போக்குவரத்து கழக கிளைகளிலிருந்து, இப்புதிய பேருந்துகள், தருமபுரி-சென்னை, ஒகேனக்கல்-ஒசூா், தருமபுரி-ஒசூா், அரூா்-மதுரை, அரூா்-திருவண்ணாமலை, ஒசூா்-புதுச்சேரி, ஒசூா்-கடலூா் உள்ளிட்ட 27 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.

இவ்விழாவில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி),.வே.சம்பத்குமாா் (அரூா்), தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, போக்குவரத்துக் கழக துணை மேலாலா்கள் சிவமணி, ராஜராஜன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT