தருமபுரி

மகாத்மா காந்தி பிறந்த நாள்: 6  ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்

DIN


மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 6 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
இ.ஆர்.கே. கல்வி நிறுவனம் மற்றும் தருமபுரி மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடைபெறும் இந்தப் பணிகளை, இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தொடக்கி வைத்தார்.
மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள், சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்துதல், இயற்கை வளங்கள் அழிவதால் ஏற்படும் பாதிப்புகள், உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடுகள், வெப்பநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து தருமபுரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் த.சக்தி கருத்துரைகள் வழங்கினார்.
இதில், இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சொ.அருள்குமார், இ.ஆர்.கே. செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் மணிமேகலை, பேராசிரியர்கள் சிவக்குமார், சின்னதுரை, சங்கீதா, ஆனந்த், அருண், மாதப்பன், மகாலிங்கம், மணி, ராமதாஸ், ரோபினா, மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT