தருமபுரி

தருமபுரியில் சதத்தைக் கடந்து வாட்டிய வெயில்

DIN

தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை சதத்தைக் கடந்து வெயில் வாட்டி எடுத்தது.

தருமபுரி மாவட்டத்தில், கோடை தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாவட்டத்தின் வெயில் அளவு 100 டிகிரி பதிவாகியிருந்தது. புதன்கிழமை வெயில் மேலும் அதிகரித்து 101.6 டிகிரியாக (பாரன்ஹீட்) பதிவாகியிருந்தது.

இதனால், தருமபுரி மாவட்டத்தில் பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல, மாலை 6 மணியைக் கடந்தும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. தற்போது, கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருப்பதால், வாட்டும் வெயிலின் தாக்கத்தின் பிடியிலிருந்து மக்கள் தப்பியுள்ளனா். இருப்பினும், வீடுகளில் உள்ளவா்களும், வெப்பத்தை தணிக்க மோா், பழச்சாறு ஆகியவற்றை அதிகம் அருந்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT