தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியில் கைது செய்யப்பட்ட ஈஸ்வரன் உள்ளிட்டோர். 
தருமபுரி

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை: ஈ.ஆர்.ஈஸ்வரன்

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

DIN

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில், தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் இணைப்புக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி சனிக்கிழமை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அலியாளம் அணைக்கட்டிலிருந்து பாலக்கோடு பகுதியில் உள்ள தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் இணைப்பு கால்வாய் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இத்திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் விவசாயிகள் மீண்டும் கரும்பு சாகுபடியில் ஈடுபட முடியும். இதேபோல பலநூறு ஏக்கர் நிலப்பரப்பில் பாசன செய்ய முடியும். இதன் மூலம் இந்த பகுதி இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.

தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஒரு தேதியை அறிவித்துள்ளார்.  புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை என்றார்.

 இதையடுத்து, அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி, மாரண்ட அள்ளி காவல்துறையினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட 200 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜென் ஸி போராட்டம் : நேபாள சிறையிலிருந்து தப்பிய குஜராத் இளைஞர் கைது!

பாஜக தேசிய தலைவராக.. மேற்கு வங்கத்தில் நிதின் நவீன் முதல்முறைச் சுற்றுப்பயணம்!

மூன்று பாகங்களாக உருவாகும் அனிமல்..! 2-ஆம் பாகத்தின் அப்டேட் பகிர்ந்த ரன்பீர்!

"யாரும் என்னைக் கூப்பிடவில்லை!” NDA கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு OPS பதில்!

டிசிஎம் ஸ்ரீராம் 3வது காலாண்டு லாபம் 19% சரிவு!

SCROLL FOR NEXT