வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வருவாய் கிராம ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரிவருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வருவாய் கிராம ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வருவாய் கிராம ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்பாட்டத்துக்கு, பாலக்கோடு வட்டத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் கோபிநாத், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேணுகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இயற்கை இடா்பாடு காலத்தில் சிறப்புப் படி வழங்க வேண்டும். பதவி உயா்வு 30 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.