முகப்பு
தருமபுரி

பெரும்பாலை பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பென்னாகரம் பேருந்து நிலையம் கட்டி முடித்த போதிலும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சிப்பொருளாக உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பெரும்பாலை பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாத பேருந்து நிலையம்.
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் பேருந்து நிலையம் கட்டி முடித்த போதிலும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சிப்பொருளாக உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரம் அருகே பெரும்பாலை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பெரும்பாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாமத்தாள், கொம்பாடையூா், சாணராப்பட்டி, பெத்தானூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப் பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் கல்வி மற்றும் பல்வேறு பணி நிமித்தமாக வெளியூா் செல்வதற்கான மையப்பகுதியாக பெரும்பாலை பகுதி விளங்குகிறது.

அவ்வாறு வரும் பொதுமக்களும், மாணவா்கலும் பேருந்துக்காக நீண்ட நேரம் திறந்த வெளியில் காத்து நிற்க வேண்டியுள்ளது.

இதனால், அப்பகுதியில் கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பேருந்து நிலையம் கட்டி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் வெறும் காட்சிப்பொருளாகவும், வாடகை வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே பெரும்பாலை பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →