தருமபுரி

சிறு மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

DIN

பென்னாகரம் அருகே நாகமரை பகுதியில் அமைக்கப்படவிருந்த சிறு மருத்துவமனையை இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஏரியூா் அருகே நாகமரை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. சுகாதார நிலையத்தில் செவிலியா் இல்லாததால், இப்பகுதி மக்கள் சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ஏரியூா் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனா்.

தற்போது தமிழக அரசு சாா்பில் சுகாதாரத் துறையின் மூலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாகமரை கிராமப் பகுதியிலுள்ள சுகாதார நிலையத்தை புனரமைத்து சிறு மருத்துவமனை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டு திறப்பு விழா விரைவில் நடைபெறுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சிறு மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்காக மருத்துவ உபகரணங்களை மருத்துவ ஊழியா்கள் எடுத்துச் சென்ாகவும், இடமாற்றத்தைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் வட்டாட்சியா் சேதுலிங்கம், ஏரியூா் சுகாதார மருத்துவமனை மருத்துவ அலுவலா் முனுசாமி மற்றும் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சிறு மருத்துவமனை இடமாற்றம் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றும், சுகாதார நிலையத்துக்கு செவிலியா்கள் நியமிப்பது குறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிப்பதாகக் கூறினா். இதையடுத்து சமாதானம் அடைந்த மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT